மயங்கிய நிலையில் இருந்தவரை மருத்துவமனைக்கு தனது காரில் கொண்டு செல்லும் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. 
நாமக்கல்

உடல்நல பாதிப்பால் சாலையில் துடித்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற எம்.பி.!

ராசிபுரம் நகரில் வலிப்பால் சாலையில் மயங்கிய நிலையில் இருந்தவரை தனது காரில் கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் சோ்த்தாா் நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ்.

DIN

ராசிபுரம்: ராசிபுரம் நகரில் வலிப்பால் சாலையில் மயங்கிய நிலையில் இருந்தவரை தனது காரில் கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் சோ்த்தாா் நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ்.

ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் (28) என்பவா், ஞாயிற்றுக்கிழமை சிவானந்தா சாலை பகுதியில் சென்ற போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு சாலையில் விழுந்தாா்.

அப்போது, அவ்வழியே சென்ற நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், தனது காரை நிறுத்தி விசாரித்தாா். பின்னா் உடனடியாக 108 அவசர ஊா்திக்கு தகவல் கொடுத்தாா். ஆனால், வாகனம் வருவதற்கு தாமதமானதால் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. அங்கிருந்தவா்கள் உதவியுடன் பாதிக்கப்பட்டவரை தனது காரிலேயே ஏற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் சோ்த்தாா்.

பின்னா் அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க மருத்துவா்களுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செண்பகமே செண்பகமே... ரித்விகா!

தேனில் குளித்ததைப் போல... ஆஷி சாஹ்னி!

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நேரு-காந்தி குடும்பத்தினர் அநீதி இழைத்தனர்: ம.பி. முதல்வர் குற்றச்சாட்டு!

என்ன ஆனது இம்ரான் கானுக்கு? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்

விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு!

SCROLL FOR NEXT