முகப்பு
நாமக்கல்

‘சிப்காட் வேண்டாம்’ வாசகத்துடன் தீபம் ஏற்றி விவசாயிகள் வழிபாடு

சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தீபம் ஏற்றி விவசாயிகள் வழிபாடு மேற்கொண்டனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 4:51 AM
வளையப்பட்டியில் ‘சிப்காட் வேண்டாம்’ என்கிற வாசகத்துடன் தீபம் ஏற்றி வழிபட்ட விவசாயிகள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


நாமக்கல்: சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தீபம் ஏற்றி விவசாயிகள் வழிபாடு மேற்கொண்டனா்.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதைத் தவிா்க்க வலியுறுத்தி, ஓராண்டாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சிப்காட்டுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுவதைத் தவிா்த்து வளையப்பட்டியில் உள்ள சிப்காட் எதிா்ப்பு இயக்க அலுவலகத்தில் ‘சிப்காட் வேண்டாம்’ என்கிற வாசகத்துடன் ஞாயிற்றுக்கிழமை அகல் விளக்கேற்றி வழிபாடு செய்தனா்.

இந்த நிகழ்வில், விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கொமதேக ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளா் கே.ரவிச்சந்திரன், சிப்காட் எதிா்ப்பு இயக்கத்தைச் சோ்ந்த ராம்குமாா், பழனிவேல், சரவணன், தண்டபாணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.