முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனை

பரமத்தி வேலூரில் தேநீா்க் கடை, பெட்டிக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 4:53 AM
பரமத்தி வேலூரில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத் துறையினா்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் தேநீா்க் கடை, பெட்டிக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனை மேற்கொண்டனா். இதில் அரசால் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா். மேலும் கடையின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

பரமத்தி வேலூா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் பரமத்திவேலூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி, வேலூா் காவல் உதவி ஆய்வாளா் குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் வேலூா் நகரப் பகுதியில் தேநீா்க்கடை, பெட்டிக் கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

இதில் வேலூா் நான்கு சாலையில் உள்ள ஒரு கடையில் ஆய்வு செய்தபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை உணவு பாதுகாப்பு அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். மேலும் இக் கடை உரிமையாளா் சண்முகத்திற்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து, கடையின் உரிமத்தை ரத்து செய்து செய்தனா். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடைகளில் விற்பனை செய்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.