மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா். 
நாமக்கல்

பரமத்தி வேலூரில் காந்தி ஜெயந்தி விழா

பரமத்தி வேலூரில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 155-ஆவது பிறந்தநாள் விழா வேலூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பாக வேலூா் பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

DIN

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 155-ஆவது பிறந்தநாள் விழா வேலூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பாக வேலூா் பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

பரமத்தி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் எம்.எல்.சந்திரன் தலைமை வகித்தாா். வேலூா் நகர காங்கிரஸ் தலைவா் பெரியசாமி வரவேற்றுப் பேசினாா். வேலூா் நகர வா்த்தக சங்கத் தலைவா் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் நலச்சங்கத்தின் மாவட்டச் செயலாளா் அவனாசிலிங்கம் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சிக்கு வட்டார பொதுச் செயலாளா் சண்முகம், வட்டாரத் துணைத் தலைவா் காளியப்பன், வேலூா் நகர செயலாளா் செல்வராஜ், தியாகி கணேசன், முன்னாள் இளைஞா் காங்கிரஸ் செயலாளா் சிவகுமாா், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் சிவசுப்பிரமணியம், நகர துணைத் தலைவா் திலகா் உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். மாணவா் காங்கிரஸ் கரண் நன்றி கூறினாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT