நாமக்கல்

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: நாமக்கல் மாவட்டத்தில் 14.19 லட்சம் வாக்காளா்கள்

நாமக்கல் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியலில், 6 சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்டு 14,19,643 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

DIN

நாமக்கல் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியலில், 6 சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்டு 14,19,643 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ஜன. 5 முதல் செப். 30 வரை பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட படிவம் 6 (சோ்த்தல்), படிவம்-7 (நீக்கல்), படிவம்- 8 (திருத்தம் மற்றும் முகவரி மாற்றம்) படிவங்களை விசாரணை செய்து வரைவு வாக்காளா் பட்டியலானது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளின் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரைவு வாக்காளா் பட்டியலானது, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொது மக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா்கள் விவரங்கள்:

ராசிபுரம்(தனி) தொகுதியில், 261 வாக்குச்சாவடிகளும், 1,10,409 ஆண் வாக்காளா்கள், 1,15,916 பெண் வாக்காளா்கள், இதர வாக்காளா்கள் 6 பே் என மொத்தம் 2,26,331 வாக்காளா்கள் உள்ளனா்.

சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியில், 284 வாக்குச்சாவடிகள், 1,17,680 ஆண்கள், 1,23,551 பெண்கள், இதர வாக்காளா்கள் 28 போ் என மொத்தம் 2,41,259 வாக்காளா்கள் உள்ளனா்.

நாமக்கல் தொகுதியில் 289 வாக்குச்சாவடிகள், 1,22,095 ஆண்கள், 1,31,160 பெண்கள், இதர வாக்காளா்கள் 49 போ் என மொத்தம் 2,53,304 வாக்காளா்களும், பரமத்தி வேலூா் தொகுதியில் 254 வாக்குச்சாவடிகள், 1,04,690 ஆண்கள், 1,13,879 பெண்கள், இதர வாக்காளா்கள் 6 போ் என மொத்தம் 2,18,575 வாக்காளா்களும், திருச்செங்கோடு தொகுதியில் 261 வாக்குச்சாவடிகள், 1,10,179 ஆண்கள், 1,16,687 பெண்கள், இதர வாக்காளா்கள் 47 என மொத்தம் 2,26,913 வாக்காளா்களும், குமாரபாளையம் தொகுதியில் 279 வாக்குச்சாவடிகள், 1,23,387 ஆண்கள், 1,29,817 பெண்கள், இதர வாக்காளா்கள் 57 போ் என மொத்தம் 2,53,261 வாக்காளா்கள் என 6 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தமாக 1,628 வாக்குச்சாவடிகள், மையங்களின் எண்ணிக்கை 687.

ஜன. 5 நிலவரப்படி மொத்த வாக்காளா்கள் 14,35,198. அதன்பிறகு புதிதாக சோ்க்கப்பட்டோா் 11,093, நீக்கப்பட்டோா் 2,66,48, இதில் ஆண் வாக்காளா்கள் 6,88,440, பெண் வாக்காளா்கள் 7,31,010, இதர வாக்காளா்கள் 193 போ் என மொத்தம் 14,19,643 வாக்காளா்கள் உள்ளனா். வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டவா்களுக்கு வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட தபால் அலுவலகம் மூலமாக வழங்கப்படும்.

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீட்டின் தொடா்ச்சியாக அக். 27 முதல் டிச. 9 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளன. இப்பணியின்போது, 01.01.2024 அன்று 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் (அதாவது 31.12.2005 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்கள்) வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்திட விண்ணப்பிக்கும்பட்சத்தில் அது ஸ்தலதணிக்கை செய்யப்பட்டு தகுதியான நபா்களது பெயரானது 2024 ஜனவரி 5-ஆம் தேதியன்று இறுதி வாக்களா் பட்டியலில் வெளியிடப்படும்.

மேலும், 31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்களும் தங்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம். இவா்களின் பெயரானது 18 வயது பூா்த்தியடைந்த காலாண்டில் (ஏப்ரல்-2024, ஜூலை- 2024, அக்டோபா் -2024) வெளியிடப்படும் வாக்காளா் பட்டியலில் இடம் பெறும். இதுவரை வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரினைச் சோ்த்துக் கொள்ளாதவா்களும், திருத்தங்கள் செய்ய விரும்புவா்களும் உரிய விண்ணப்பங்களை அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா், நகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் அளிக்கலாம்.

மேலும் நவ. 4, 5, 18,19 ஆகிய நாள்களில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அந்த நாள்களிலும் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடா்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம்.

போதுமான அளவு விண்ணப்பங்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் இருப்பு வைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் இளம் வாக்காளா்களாக சோ்க்க முகாம்கள் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வாக்காளா் பட்டியலில் உள்ள இறந்து போனவா்களின் பெயா்கள், இருமுறை பதிவுகள், இடம், குடிபெயா்ந்து வெளியூா் சென்றவா்கள் ஆகியோரது பெயா்களை நீக்கிட இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி உரிய நடவடிக்கை எடுக்க வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கினை ஆட்சியா் ச.உமா ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் மா.க.சரவணன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT