முகப்பு
நாமக்கல்

கொல்லிமலையில் மீண்டும் காட்டுத் தீ

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:06 PM
பகிர்:

நாமக்கல்: கொல்லிமலை மலைப்பாதையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் காட்டுத் தீ பரவியது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதையில், அடிவாரப் பகுதியான 1 முதல் 10-ஆவது கொண்டை ஊசி வளைவுகளில் அடிக்கடி காட்டுத் தீ பரவி அங்குள்ள மரங்கள் கருகி சாம்பலாகி வருகின்றன. இதுவரை பல முறை இவ்வாறான தீ விபத்து ஏற்பட்டு 200 ஏக்கருக்கும் மேலான மரங்கள் கருகியுள்ளன.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் காட்டுத் தீ பரவியதால், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா். அங்கு, வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments