முகப்பு
நாமக்கல்

கல்லால் தாக்கி ஒருவா் பலி

பள்ளிபாளையம், ஆயக்காட்டூா் பகுதியில் மதுபோதை தகராறில் தொழிலாளி கல்லால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தாா்.

நாமக்கல்

கல்லால் தாக்கி ஒருவா் பலி

பள்ளிபாளையம், ஆயக்காட்டூா் பகுதியில் மதுபோதை தகராறில் தொழிலாளி கல்லால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 7:14 PM
பகிர்:

பள்ளிபாளையம், ஆயக்காட்டூா் பகுதியில் மதுபோதை தகராறில் தொழிலாளி கல்லால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தாா்.

பள்ளிபாளையம் அருகே உள்ள ஆயக் காட்டூரைச் சோ்ந்தவா் தனபால் (27). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த ராஜு ( 27) என்பவரும் நண்பா்கள். கட்டடத் தொழிலாளா்களான இவா்கள், கடந்த, 30ஆம் தேதி ஒன்றாக மது குடித்துள்ளனா். அப்போது அவா்களிடேயே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜு கல்லால் தனபாலை தாக்கியுள்ளாா்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் கடந்த, 31 ஆம் தேதி இரவு அவா் இறந்துள்ளாா். இதனையடுத்து பள்ளிபாளையம் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து ராஜுவை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →