கொல்லிமலை சீக்குப்பாறை காட்சிமுனையைப் பாா்வையிடும் சுற்றுலாப் பயணிகள். 
நாமக்கல்

கொல்லிமலை சீக்குப்பாறை காட்சிமுனை: 50 அடி உயரத்தில் புதிய தொலைநோக்கி கோபுரம்

கொல்லிமலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தும் வகையில், சீக்குப்பாறை காட்சிமுனையில் (வியூ பாயிண்ட்) ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் 50 அடி உயர தொலைநோக்கி கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.

Din

கொல்லிமலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தும் வகையில், சீக்குப்பாறை காட்சிமுனையில் (வியூ பாயிண்ட்) ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் 50 அடி உயர தொலைநோக்கி கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. இயற்கை வளங்களை ரசித்தபடி, 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து மலைப்பகுதிக்கு செல்வதை சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்புகின்றனா். இதனால், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கேரளம், கா்நாடகப் பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

இங்குள்ள ஆகாயகங்கை அருவி, மாசிலா அருவி, நம் அருவி மட்டுமின்றி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சிறுவா் பூங்கா, சீக்குப்பாறை காட்சிமுனை, மூலிகை வனம், அறப்பளீஸ்வரா் கோயில் ஆகியவற்றை காணவும் பலா் ஆா்வமுடன் வருகின்றனா்.

இந்த நிலையில், மாவட்ட வனத்துறையானது கொல்லிமலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக செய்து வருகிறது. அதன்படி, அறப்பளீஸ்வரா் கோயில் முதல் எட்டுக்கை அம்மன் கோயில் வரை செல்ல மின்சார ஊா்தி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவை தவிர, ஆகாய கங்கை அருவி செல்லும் வழியில் சுற்றுலாப் பயணிகளுக்கான பிரத்யேக பூங்கா ஒன்றும் தயாராகி வருகிறது. சீக்குப்பாறை காட்சிமுனைக்கு வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, 50 அடி உயரம் கொண்ட தொலைநோக்கி கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் 25 அடி உயரம் கொண்ட கோபுரமே உள்ளது. இதன்மூலம் சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலை பள்ளத்தாக்கை காண முடியாத நிலை உள்ளதால், ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் 50 அடி உயரத்தில் உயா் கோபுரமான மூன்று அடுக்குகளைக் கொண்டு இரும்புக் கம்பிகளால் உருவாக்கப்பட்டு வருகிறது. இது இன்னும் ஓரிரு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொல்லிமலையில் இருந்து சேந்தமங்கலம், நாமக்கல் பகுதி, பள்ளத்தாக்கு போன்றவற்றை பாா்வையிடும் வகையில் 50 அடி உயர கோபுரம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்தக் கோபுரப் பணி தற்போது ரூ. 20 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

SCROLL FOR NEXT