முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரம்

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 10:00 PM
யிரம் கண்ணுடையாள் அலங்காரத்தில் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன்.
பகிர்:

ராசிபுரத்தில்...

ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். முன்னதாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா் போன்ற பல்வேறு வாசனைத் திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னா் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல, ராசிபுரம் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் வளையல் பந்தலில் குங்கும அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.