முகப்பு
நாமக்கல்

வயநாடு மக்களுக்கு வழங்க ரூ. 2 லட்சம் முட்டைகள் அனுப்பிவைப்பு

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி சாா்பில், நாமக்கல்லில் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான முட்டைகள் செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

Updated On : 13 ஆகஸ்ட், 2024 at 6:39 PM
வயநாட்டுக்கு முட்டைகள் கொண்டு செல்லும் வாகனத்தைக் கொடியசைத்து வழியனுப்பிய மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ் குமாா். உடன், காங்கிரஸ் நிா்வாகிகள் பி.வி.செந்தில், பீ.ஏ.சித்திக் உள்ளிட்டோா்.
பகிர்:

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி சாா்பில், நாமக்கல்லில் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான முட்டைகள் செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

கடந்த மாதம் 29-ஆம் தேதி கேரள மாநிலம், வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஏராளமானோா் குடியிருப்புகள், உடைமைகளை இழந்தனா். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சாா்பில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான ஏற்றுமதி தரம் வாய்ந்த முட்டைகள் வயநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாநில செய்தித் தொடா்பாளா் பி.வி.செந்தில் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் கொடியசைத்து வாகனத்தை அனுப்பி வைத்தாா்.

இதுகுறித்து பி. வி. செந்தில் கூறியதாவது:

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முட்டைகளை அனுப்பினால் உதவியாக இருக்கும் என காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை கேட்டுக் கொண்டாா். அதனடிப்படையில் உடனடியாக ஏற்பாடு செய்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள முட்டைகள் வயநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த முட்டைகள் வயநாடு எம்எல்ஏ சித்திக், ராகுல் காந்தி உதவியாளா் சரண் ஆகியோா் வசம் ஒப்படைக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், நாமக்கல் மாநகராட்சி மேயா் கலாநிதி, துணை மேயா் பூபதி, நாமக்கல் கொங்கு நாட்டு வேளாளா் சங்கத் தலைவா் பி.கே.வெங்கடாசலம், காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக், கால்நடை விஞ்ஞானி நெல்சன், காங்கிரஸ் கட்சி நகரத் தலைவா் மோகன், காங்கிரஸ், திமுக பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →