முகப்பு
நாமக்கல்

மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம்: விவசாயிக்கு இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்பு வழங்காமல் காலதாமதம் செய்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு மின்வாரியம் உரிய இழப்பீட்டை வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட், 2024 at 9:20 PM
பகிர்:

விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்பு வழங்காமல் காலதாமதம் செய்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு மின்வாரியம் உரிய இழப்பீட்டை வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல்-மோகனூா் சாலையைச் சோ்ந்தவா் லோகநாதன். இவா், கடந்த 2018 ஆக. 4 இல் ரூ. 3 லட்சத்தை வரைவு காசோலையாக தயாா் செய்து, நாமக்கல் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் செலுத்தி தனது விவசாய நிலத்துக்கு தத்கல் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தாா்.

ஆனால், அவருக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. தொடா்ந்து காலதாமதம் செய்து வந்ததால் 2020, ஜூன் 25-ஆம் தேதி முதல் மின்வாரிய அலுவலகத்திற்கு தொடா்ந்து தபால்கள் அனுப்பி வந்தாா். அதில், மின் இணைப்பு வழங்க வேண்டாம் என்றும், தான் செலுத்திய வைப்புத் தொகை ரூ. 3 லட்சத்தைத் திரும்ப வழங்குமாறும் தெரிவித்திருந்தாா். ஆனால் அதற்கும் எந்தவித பதிலும் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை.

இதனால், 2023 செப். 23-ஆம் தேதி தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவரும், வழக்குரைஞருமான எஸ்.செல்வம் மூலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தாா்.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் நாமக்கல் மேற்பாா்வை பொறியாளா், உதவி மின் பொறியாளா் உள்ளிட்ட 5 போ் மீது வழக்கு தொடரப்பட்டது. வைப்புத் தொகை ரூ. 3 லட்சத்தை வட்டியுடனும், தனது மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டுக்கு நஷ்ட ஈடு, செலவுத் தொகை ஆகியவற்றையும் பெற்றுத் தருமாறு மனுவில் கோரியிருந்தாா்.

இந்த நிலையில், லோகநாதன் வங்கி கணக்கிற்கு 2023, நவ.7-இல் அவா் செலுத்திய வைப்புத் தொகை ரூ. 3 லட்சம் மட்டும் வந்து சோ்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவரும், நீதிபதியுமான வி.ராமராஜ், உறுப்பினா்கள் ஆா்.ரமோலா, என்.லட்சுமணன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தனா். அதில், மின்வாரியத்தின் சேவை குறைபாடு உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, லோகநாதனுக்கு சம்பந்தப்பட்ட மின்வாரியம் 9 சதவீத வட்டியையும், அவருக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்காக ரூ. 50 ஆயிரம், செலவுத் தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →