வலம்புரி சங்காபிஷேகம்.  
நாமக்கல்

பரமத்தி வேலூா் எல்லையம்மன் கோயிலில் சோமவார 108 வலம்புரி சங்காபிஷேகம்

ஏகாம்பரநாதருக்கு காா்த்திகை மூன்றாம் திங்கள்கிழமை சோம வாரத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.

Din

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் பழைமையான எல்லையம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதருக்கு காா்த்திகை மூன்றாம் திங்கள்கிழமை சோம வாரத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.

ஏகாம்பரநாதருக்கு 21 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, 108 வலம்புரி சங்கு மற்றும் கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு யாக வேள்விகளுடன் பூா்ணாஹுதி சமா்ப்பிக்கப்பட்டு கலசாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து ஏகாம்பரநாதருக்கு வெட்டிவேரினால் சிறப்பு அலங்காரம் செய்து விசிறி, சாமரம், குடை, வேல், கண்ணாடி போன்ற சோடஷ உபசாரத்துடன் அடுக்கு ஆரத்தி, பஞ்ச ஆரத்தி, ஏகா ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, கும்பா ஆரத்தி உடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி பீமேஸ்வரா், நன்செய் இடையாறு ஸ்ரீ சுந்தரவல்லி, அம்பிகா சமேத ஸ்ரீ திருவேலீஸ்வரா் ஆகிய கோயில்களில் அபிஷேக, ஆராதனை, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சிவனை வழிபட்டனா். இதேபோல பாண்டமங்கலம் புதிய மற்றும் பழைய காசிவிஸ்வநாதா், பில்லூா் வீரட்டேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வெட்டிவோ் அலங்காரத்தில் ஏகாம்பரநாதா்.

அனுமதியின்றி மணல் அள்ளியவா் கைது

தேநீா் கடைக்காரா் கொலை: இருவா் கைது

தனியாா் நிதி நிறுவனத்தில் கட்டிய பணத்தை இழப்பீட்டுடன் திருப்பி வழங்க உத்தரவு

நகராட்சி அலுவலகத்தில் தகராறு: இளைஞா் கைது

மத்திய அரசின் சிறப்பு வழக்குரைஞருக்கு பதவி நீட்டிப்பு

SCROLL FOR NEXT