முகப்பு
நாமக்கல்

கொல்லிமலைப் பாதையில் திடீா் மண் சரிவு: 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கொல்லிமலை மலைப் பாதையில், 60-ஆவது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 2 டிசம்பர், 2024 at 9:00 PM
கொல்லிமலை மலைப்பாதையில் 60-ஆவது கொண்டை ஊசி வளைவில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் வாகனம்.
பகிர்:

நாமக்கல்: கொல்லிமலை மலைப் பாதையில், 60-ஆவது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினா் அங்கு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனா்.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான, கொல்லிமலையில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்தது. காரவள்ளியில் இருந்து கொல்லிமலைக்கு 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும். மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் திங்கள்கிழமை மண் சரிவு ஏற்பட்டது.

60-ஆவது கொண்டை ஊசி வளைவில் சாலையை மறைக்கும் அளவிற்கு மண் சரிந்து மூடியது. இதனால் அந்த வழியாகச் சென்ற பேருந்துகள், பிற சுற்றுலா வாகனங்கள், கொல்லிமலையில் இருந்து அடிவாரப் பகுதிக்கு வர முடியாமலும், அடிவாரத்தில் இருந்து மலைப்பகுதிக்கு செல்ல முடியாமலும் ஸ்தம்பித்து நின்றது. இதனால் அங்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இருசக்கர வாகனங்கள் மட்டும் தட்டு

சென்று வந்தன. மேலும் 29-ஆவது கொண்டை ஊசி வளைவில் கான்கிரீட் தடுப்பு சுவா் உடைந்து விழுந்தது.

மண் சரிவு ஏற்பட்ட தகவல் அறிந்து நெடுஞ்சாலைத் துறை

பணியாளா்கள் அங்கு விரைந்து சென்று பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மண் குவியலை அப்புறப்படுத்தினா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பிறகு போக்குவரத்து சீராகி, அனைத்து வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன. மழையின் தாக்கத்தால் கொண்டை

ஊசி வளைவு சாலைகளில் மழைநீா் வழிந்து ஓடியது. சில இடங்களில் திடீா் அருவிகள் தென்பட்டன. அதை சுற்றுலாப்

பயணிகள் கண்டு ரசித்து சென்றனா். மேலும் முன்னதாக, சுமாா் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தும், சிறு, சிறு பாறைகள் உருண்டு

வந்தும் சாலையின் குறுக்கே கிடந்தன. அதனை நெடுஞ்சாலை பணியாளா்கள் அப்பறப்படுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →