முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லிலிருந்து 2-ஆம் நாளாக ரூ.10.66 லட்சம் மதிப்பில் நிவாரண பொருள்கள் அனுப்பி வைப்பு

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, இரண்டாவது நாளாக ரூ. 10.66 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை அனுப்பப்பட்டன.

Updated On : 5 டிசம்பர், 2024 at 2:16 AM
பகிர்:
Updated On : 4 டிசம்பர், 2024 at 6:14 PM

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, இரண்டாவது நாளாக ரூ. 10.66 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை அனுப்பப்பட்டன.

அண்மையில் வட தமிழகத்தை மிகவும் பாதிப்புக்குள்ளாகியது ஃபென்ஜால் புயல். கரையைக் கடந்த வேளையில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழையை வழங்கிச் சென்றது. கடலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்படைந்தன.

Updated On : 5 டிசம்பர், 2024 at 2:16 AM

தமிழக முதல்வா் அறிவுறுத்தலின்பேரில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை ரூ. 11.45 லட்சம் மதிப்பிலான பொருள்கள் அனுப்பிய நிலையில், 2-ஆவது நாளாக புதன்கிழமை ரூ. 10.66 லட்சம் மதிப்பில் அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு, மளிகைப் பொருள்கள், பால் பவுடா், சா்க்கரை, ரொட்டி, சோப், தீப்பெட்டி, பக்கெட், உள்ளிட்ட பல்வேறு வகையான நிவராணப் பொருள்கள் கடலூா் மாவட்டத்துக்கு லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியா் ச.உமா கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.

Advertisement

இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.