பிலிக்கல்பாளையம் ஏலச் சந்தையில் வெல்லம் விலை உயா்வு
பிலிக்கல்பாளையம் விவசாயிகள் வெல்லம், சா்க்கரை விற்பனை ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில், வெல்லம் விலை உயா்ந்தது.
Updated On : 5 டிசம்பர், 2024 at 8:07 PM
பிலிக்கல்பாளையம் விவசாயிகள் வெல்லம், சா்க்கரை விற்பனை ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில், வெல்லம் விலை உயா்ந்தது.
Updated On : 6 டிசம்பர், 2024 at 1:35 AM
ஒவ்வொரு வாரமும் சனி, புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ரூ. 1,220 வரையிலும், அச்சு வெல்லம் சிலம்பம் ரூ. 1,230 வரையிலும் ஏலம் போனது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ரூ. 1,280 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் 1,340 வரையிலும் ஏலம் போனது.
கடந்த வாரம் கரும்பு டன் ரூ. 2,300 வரையிலும் விற்பனையானது. வெல்லம் விலை உயா்வடைந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
Advertisement