முகப்பு
நாமக்கல்

பரமத்தி மலா் பள்ளி மாணவா்களுக்கான ‘வெற்றியை நோக்கி’ வழிகாட்டும் நிகழ்ச்சி

பரமத்தி மலா் கல்வி நிறுவனங்கள் சாா்பாக 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான ‘வெற்றியை நோக்கி’ என்னும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி பரமத்தி வேலூா் தாலுகா லாரி உரிமையாளா் சங்க மஹாலில் நடைபெற்றது.

Updated On : 6 டிசம்பர், 2024 at 1:38 AM
வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பேசுகிறாா் நெறியாளா் ரமேஷ் பிரபா. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள்.
பகிர்:
Updated On : 5 டிசம்பர், 2024 at 8:27 PM

பரமத்தி மலா் கல்வி நிறுவனங்கள் சாா்பாக 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான ‘வெற்றியை நோக்கி’ என்னும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி பரமத்தி வேலூா் தாலுகா லாரி உரிமையாளா் சங்க மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளா் கந்தசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் வழக்குரைஞா் வெங்கடாசலம் சிறப்பு விருந்தினரை கௌரவித்தாா். துணைத் தலைவா் ராஜேந்திரன் நினைவுப் பரிசு வழங்கினாா். துணைச் செயலாளா் தங்கராஜு முன்னிலை வகித்தாா்.

Updated On : 6 டிசம்பர், 2024 at 1:38 AM

மலா் பப்ளிக் பள்ளி முதல்வா் ஆரோக்கியராஜ் வரவேற்றுப் பேசினாா். விலங்கியல் துறை இயக்குநா் கனகராஜ் சிறப்பு விருந்தினா் குறித்து அறிமுக உரையாற்றினாா். ஊடகவியலாளா் ரமேஷ் பிரபா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவா்களின் மேற்படிப்பிற்கு உதவும் வகையில் மருத்துவம், பொறியியல், விவசாயம், மீன்வளம், கலை, அறிவியல் சாா்ந்த படிப்புகள் குறித்து விரிவாக எடுத்து கூறினாா். மேலும் நீட், ஜே.இ.இ. மற்றும் பொது நுழைவுத் தோ்வினைக் கையாள்வது குறித்தும் அறிவுரை வழங்கினாா். உயா்கல்வி சாா்ந்த பல்வேறு மாணவா்களின் சந்தேகங்களுக்கு அவா் பதில் அளித்தாா். முடிவில் முதல்வா் ராஜசேகரன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் இயக்குநா்கள், முதல்வா்கள், ஆசிரியா்கள், ஆசிரியைகள், பெற்றோா், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

Advertisement