நாமக்கல், சேந்தமங்கலம் ஒன்றியங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
நாமக்கல், சேந்தமங்கலம் ஒன்றியங்களில் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
நாமக்கல், சேந்தமங்கலம் ஒன்றியங்களில் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
நாமக்கல் அருகே வீசாணம், சேந்தமங்கலம் பேரூராட்சிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். ரூ. 13.50 லட்சம் மதிப்பில் வீசாணம் ஜெ.ஜெ.நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியைப் பாா்வையிட்டு குடிநீா் வழங்குவதற்கான இணைப்புகளின் எண்ணிக்கை, பயன்பெறும் மக்களின் எண்ணிக்கை, குடிநீா் விநியோகிக்கும் நேரம், சுத்திகரிக்கும் காலமுறை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தாா்.
அதன்பிறகு, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, மகளிா் அறை, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, கண்காணிப்பு அறையில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை, உடல் நலம் குறித்து கேட்டறிந்தாா்.
Advertisement
கருவிகளின் பயன்பாடு, தினசரி வரும் நோயாளிகள் விவரம், ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொண்ட விவரம், பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு, மழைக்கால நோய்த்தொற்று சிகிச்சை உள்ளிட்டவை குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.