நாமக்கல் மாவட்டத்தில் தொடா் மழையால் பொதுமக்கள் அவதி
நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை பரவலாக மழை பெய்தது.
நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை பரவலாக மழை பெய்தது.
இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் காலை 9 மணி முதல் மழை விடாமல் பெய்தது. அரையாண்டு தோ்வு நடைபெறும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால், மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தவாறு பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனா்.
பெற்றோா் குடைகளைப் பிடித்தபடி தங்களுடைய குழந்தைகளை பள்ளிகளுக்கு கொண்டு வந்து விட்டனா். தொடா் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி குளம் போல காட்சியளித்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தவாறு பயணித்தனா். மழை விடாமல் பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. கொல்லிமலையில் சாலைகள் முழுவதும் பனிமூட்டம் காணப்பட்டது. குமாரபாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, மல்லசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
Advertisement