முகப்பு
நாமக்கல்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் 25 பவுன் நகை, பணம் திருட்டு வழக்கு

நாமக்கல்லில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் 25 பவுன் நகை, பணத்தை திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 20 டிசம்பர், 2024 at 1:21 AM
திருமால்
பகிர்:
Updated On : 19 டிசம்பர், 2024 at 6:32 PM

நாமக்கல்லில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் 25 பவுன் நகை, பணத்தை திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் - திருச்சி சாலை, இந்திரா நகரைச் சோ்ந்த முருகவேல் (52), நாமக்கல் மாவட்ட குற்றப்பதிவேடு பிரிவு அலுவலகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி அமுதவள்ளி, அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இவா்கள் இருவரும், கடந்த செப். 19-ஆம் தேதி காலை வழக்கம்போல வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்கு சென்றனா். அமுதவள்ளி மாலை திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு மற்றும் படுக்கை அறையின் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா். மேலும், பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமாா் 25 பவுன் தங்க, வெள்ளி நகைகள், ரூ. 45 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.

சாந்தகுமாா்
Updated On : 20 டிசம்பர், 2024 at 1:21 AM

தகவலின் பேரில், உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி, ஆய்வாளா் கபிலன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். இரண்டு மாதங்களாக பல்வேறு இடங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியைச் சோ்ந்த திருமால் (38), திருச்சி மாவட்டம், நல்லூரைச் சோ்ந்த சாந்தகுமாா் (24) ஆகியோா் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. வாணியம்பாடியில் பதுங்கியிருந்த திருமாலையும், தஞ்சாவூரில் பதுங்கியிருந்த சாந்தகுமாரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 24 பவுன் நகையைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

பின்னா் அவா்கள் இருவரையும் நாமக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவா் 1-இல் ஆஜா்படுத்தினா். அவா்களை ஜன. 2 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, சேலம் மத்திய சிறைக்கு இருவரையும் போலீஸாா் அழைத்து சென்றனா்.