முகப்பு
நாமக்கல்

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 20 டிசம்பர், 2024 at 1:19 AM
நாமக்கல் மாநகராட்சி நுழைவாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:
Updated On : 19 டிசம்பர், 2024 at 6:06 PM

நாமக்கல் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் 300-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் உள்ளனா். இவா்களுக்கான வருங்கால வைப்புநிதி, நிா்ணயிக்கப்பட்ட முழுமையான ஊதியம், இஎஸ்ஐ (தொழிலாளா் மருத்துவ உதவி) அட்டை வழங்காமல் ஒப்பந்த நிறுவனம் காலதாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Updated On : 20 டிசம்பர், 2024 at 1:19 AM

இந்த நிலையில், வியாழக்கிழமை பணிக்கு வந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு அமா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து, மாநகராட்சி துப்புரவு அலுவலா் திருமூா்த்தி தலைமையில் ஒப்பந்த நிறுவனம் மற்றும் தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது, இஎஸ்ஐ அட்டை 10 நாள்களுக்குள் பணியாளா்கள் வசம் ஒப்படைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Advertisement