பாண்டமங்கலத்தில் சாலை அமைக்க பூமி பூஜை
பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
Updated On : 19 டிசம்பர், 2024 at 8:32 PM
பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் பரமத்தி வேலூா் சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவா் மருத்துவா் சோமசேகா் விழாவுக்கு தலைமை வகித்தாா். பரமத்தி வேலூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சேகா் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தாா்.
Updated On : 20 டிசம்பர், 2024 at 1:27 AM
இதில், பாண்டமங்கலம் பேரூா் அதிமுக செயலாளா் செல்வராஜ், பேரூராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement