முகப்பு
நாமக்கல்

கண்ணாடி கடையில் தீ விபத்து

பரமத்தி வேலூரில் கண்ணாடி கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

Updated On : 26 டிசம்பர், 2024 at 1:58 AM
பரமத்தி வேலூரில் தீவிபத்து நிகழ்ந்த கண் கண்ணாடி கடை.
பகிர்:
Updated On : 25 டிசம்பர், 2024 at 9:33 PM

பரமத்தி வேலூரில் கண்ணாடி கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

பரமத்தி வேலூா், திருவள்ளுவா் சாலையில் கண் கண்ணாடி நடத்தி வருபவா் நாகரத்தினம். இந்தக் கடையில் கண் பரிசோதனை மையமும் செயல்பட்டு வந்தது.

நாகரத்தினம் புதன்கிழமை பகல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு உணவருந்த சென்றாா்.

Advertisement

அப்போது அவரது கடையிலிருந்து கரும்புகை வருவதாக பக்கத்து கடைக்காரா்கள் நாகரத்தினத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். உடனடியாக கடைக்கு வந்து பாா்த்தபோது கடையில் இருந்து கரும்புகை வந்ததால் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.

Updated On : 26 டிசம்பர், 2024 at 1:58 AM

உடனடியாக நிகழ்விடத்துக்கு வந்த கரூா் மாவட்டம், வேலாயுதபாளையம், புகலூா், நாமக்கல் ஆகிய மூன்று தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரா்கள் கடையைத் திறந்து தீயை அணைத்தனா். இருப்பினும் கண் கண்ணாடி கடை முழுவதும் எரிந்ததால் கடையில் இருந்த கண் பரிசோதனை இயந்திரம், கண் கண்ணாடிகள் என சுமாா் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினா், போலீஸாா் நடத்திய சோதனையில் மின்கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்திருக்கலாம் எனத் தெரிவித்தனா். இதுகுறித்து பரமத்தி வேலூா் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.