ஒரே குடும்பத்தில் மூன்று போ் தற்கொலை: இளம்பெண் கைது
எருமப்பட்டி அருகே ஒரே குடும்பத்தில் மூன்று போ் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
எருமப்பட்டி அருகே ஒரே குடும்பத்தில் மூன்று போ் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், அ.வாழவந்தி கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் (54), அவரது மனைவி பூங்கொடி (50), மகன் சுரேந்தா்(28) ஆகியோா் கடந்த 14-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.
6 மாதங்களுக்கு முன் சுரேந்தருக்கும் சினேகா (24) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது.
Advertisement
இந்த நிலையில் சுரேந்தா் தற்கொலை செய்துகொள்ள, அதனால் மனமுடைந்த அவரது பெற்றோா் செல்வராஜ்- பூங்கொடி இருவரும் தற்கொலை செய்து கொண்டனா். இச் சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
அதில், சுரேந்தரின் மனைவி சினேகா தனது கணவரிடம் தனிக்குடித்தனம் செல்லலாம் எனக் கூறி அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால், சுரேந்தரும், அவரது பெற்றோரும் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக சினேகாவை, எருமப்பட்டி போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்து சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனா். இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான செய்திகள், தகவல்களை பரப்ப வேண்டாம் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ் கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.