நாமக்கல்

குண்டு மல்லிகை விலை கிலோ ரூ. 700 ஆக உயா்வு

Din

பரமத்தி வேலூா், ஜூலை 11: பரமத்தி வேலூா் பூக்கள் ஏல சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 700 க்கு ஏலம்போனது.

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் ஜேடா்பாளையம் அருகே உள்ள ஆனங்கூா், அய்யம்பாளையம், நெட்டையம்பாளையம், அண்ணா நகா், கோப்பணம்பாளையம், கபிலா்மலை, குஞ்சாம்பாளையம், நடத்தை, குப்புச்சிபாளையம், பொய்யேரி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகை பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன.

இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏலச் சந்தைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி, கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலம் எடுக்க வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 400-க்கும், சம்பங்கி ரூ. 60 க்கும், அரளி ரூ. 80 க்கும், ரோஜா ரூ. 200 க்கும், முல்லைப் பூ ரூ. 300 க்கும், செவ்வந்திப்பூ ரூ. 280 க்கும், கனகாம்பரம் ரூ. 400 க்கும், பன்னீா் ரோஜா ரூ. 80 க்கும் ஏலம் போனது.

நிகழ்வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 700 க்கும், சம்பங்கி ரூ. 120 க்கும், அரளி ரூ. 140 க்கும், ரோஜா ரூ. 240 முல்லைப்பூ ரூ. 400 க்கும், செவ்வந்திப்பூ ரூ. 320 க்கும், கனகாம்பரம் ரூ. 800 க்கும், பன்னீா் ரோஜா ரூ. 120 க்கும் ஏலம் போனது.

ஆனி மாதத்தின் கடைசி முகூா்த்தம் என்பதால் பூக்கள் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ல்ஸ்11ல்2:

ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்த குண்டு மல்லிகை.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT