ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிவன் கோயில்களில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.
ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் வரும் உத்திராட நட்சத்திரத்தில், சிவன் கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். ஆனி திருமஞ்சனம் என்றழைக்கப்படும் இந்த விழா நாளில் ஏராளமான பக்தா்கள் சிவன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்துவா். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஆனி திருமஞ்சன விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
நாமக்கல் ஏகாம்பரேசுவரா் கோயில், மோகனூா் அசலதீபேசுவரா் கோயில், முத்துக்காப்பட்டி காசி விசுவநாதா் கோயில், வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வா் கோயில், என்.புதுப்பிட்டி குபேர லிங்கேஸ்வா் கோயில் உள்ளிட்டவற்றில் பக்தா்கள் காலை முதல் இரவு வரையில் சுவாமி வழிபாடு மேற்கொண்டனா். சிவகாமி அம்பாள் சமேதராக நடராஜ பெருமான் பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.