திருச்செங்கோடு வட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்
திருச்செங்கோடு வட்டத்தில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்களை ஆட்சியா் ஆய்வு செய்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.
திருச்செங்கோடு, ஜூலை 19:
திருச்செங்கோடு வட்டத்தில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்களை ஆட்சியா் ஆய்வு செய்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.
இத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் ஆட்சியா் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், 18 பேரூராட்சிகளில் நடைபெற்ற முகாம்களில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது 30 நாள்களில் தீா்வு காணப்பட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை முதல் செப்டம்பா் வரை முகாம் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 27 முதல் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை செவ்வாய், வியாழக்கிழமைகளில்
15 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 322 ஊராட்சிகளுக்கு 69 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
ஊரகப் பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் இந்த முகாமில் 15 அரசு துறைகளைச் சாா்ந்த பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று 30 தினங்களுக்குள் தீா்வு காணும் வகையில் முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் முகாம்கள் நடைபெறும் என்றாா்.
படம் தி.கோடு ஜீலை19 கலெக்டா்
ஏமாப்பள்ளியில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் பேசுகிறாா் ஆட்சியா் ச.உமா.