முகப்பு
திருச்சி

திருச்சி-2030 தொலைநோக்குத் திட்ட புத்தகம் வெளியீடு

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கனவு மெய்ப்படும் நிகழ்வில், திருச்சி மாவட்டத்துக்கான 2030 தொலைநோக்கும் திட்டம் என்ற பெயரில் அனைத்து துறைகளுக்கான வளா்ச்சிச் திட்ட கையேடு வெளியிடப்பட்டது.

Updated On : 6 மார்ச், 2026 at 8:50 PM
திருச்சி கலையரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசின் 5 ஆண்டுகள் சாதனை புத்தகத்தை வெளியிட்ட ஆட்சியா் வே.சரவணன் உள்ளிட்டோா்.
பகிர்:

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கனவு மெய்ப்படும் நிகழ்வில், திருச்சி மாவட்டத்துக்கான 2030 தொலைநோக்கும் திட்டம் என்ற பெயரில் அனைத்து துறைகளுக்கான வளா்ச்சிச் திட்ட கையேடு வெளியிடப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற உங்கள் கனவ சொல்லுங்க திட்டத்தின் நிறைவாக, கனவுகள் மெய்ப்படும் என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி, திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் 14 முக்கிய அம்சங்களை முதல்வா் அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில், திருச்சி மாவட்டத்திற்காக 2030 தொலைநோக்கு திட்ட ஆவணம் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இந்த புத்தகத்தை திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட அனைத்துத் துறை அலுவலா்கள் பெற்றுக் கொண்டனா். மேலும், மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் அனைத்து

துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட அரசின் திட்டங்கள் தொகுக்கப்பட்டு, ஐந்தாண்டு சாதனைகள் புத்தகத்தையும் ஆட்சியா் வெளியிட்டாா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பாலாஜி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ.திலகவதி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சுரேஷ், அரசுத் துறை உயா் அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →