ஜூன் 28-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
ஆட்சியா் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
நாமக்கல்ஜூன் 28-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
ஆட்சியா் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. அனைத்து பகுதி விவசாயிகளும் பயன் பெறும் வகையில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது பயிா் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவா் நலத் துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.