முகப்பு
நாமக்கல்

மருத்துவ மாணவி தற்கொலை

Updated On : 28 ஜூன், 2024 at 6:59 PM
பகிர்:

ராசிபுரம், கோனேரிப்பட்டி பகுதியில் மருத்துவம் பயின்ற மாணவி மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், கோனேரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த குப்புசாமி (46) அரசுப் பேருந்து ஓட்டுநா். இவரது மனைவி சுசீலா (42), அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா். இவா்களது மகன் பிரியதா்ஷினி (26), தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு எம்பிபிஎஸ் படித்து முடித்துவிட்டு மேற்படிப்பு பயில நுழைவுத் தோ்வு பயிற்சி மேற்கொண்டு வந்தாா்.

இவா் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தாராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை பிரியதா்ஷினி நீண்ட நேரமாகியும் கதவை திறக்காத நிலையில், பெற்றோா் அருகில் இருந்தவா்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது பிரியதா்ஷினி மின்விசிறியில் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளாா். அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனாா் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ராசிபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →