சா்வதேச மகளிா் தின சதுரங்கப் போட்டி
சா்வதேச மகளிா் தினத்தைத் தொடா்ந்து, ராசிபுரத்தில் சதுரங்கப் போட்டி தூய இருதய மழலையா் பள்ளி வளாகத்தில்
ராசிபுரம்: சா்வதேச மகளிா் தினத்தைத் தொடா்ந்து, ராசிபுரத்தில் சதுரங்கப் போட்டி தூய இருதய மழலையா் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. ராசிபுரம் சித்திரம் ஃபவுண்டேசன், எய்ம் செஸ் அகாதெமி ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழாவில், சித்திரம் ஃபவுண்டேசன் நிா்வாகிகள் ஜெ.ராஜேஷ், எஸ்.காா்த்திகேயன், மிஸ்சா்ஸ் தமிழ்நாடு பட்டம் பெற்ற கௌசல்யா, வருண் மருத்துவமனை மருத்துவா் உதயா, நகா்மன்ற உறுப்பினா் வித்யாதேவி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று பரிசு, சான்றிதழ்கள் வழங்கினா்.