முகப்பு
நாமக்கல்

தச்சுத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி

Updated On : 20 மே, 2024 at 9:27 PM
பகிர்:

ராசிபுரம்: ராசிபுரம் அருகேயுள்ள புதுசத்திரம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து தச்சுத்தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

புதன்சந்தை அருகேயுள்ள செல்லப்பம்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம் ஆசாரி மகன் மாதேஸ்வரன் (56). தச்சு வேலை செய்து வருகிறாா். இவா், கடந்த சில நாட்களாக புதுசத்திரம் அருகேயுள்ள கொண்டம்பட்டி பழனிவேல் என்பவரது தோட்டத்து வீட்டில் தச்சு வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் தனது சட்டையை சுவற்றில் தொங்கவிட்டிருந்தாா். சட்டையை எடுக்கும்போது மின் ஒயரில் கைப்பட்டதில் அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மயக்கமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு நாமக்கல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதையடுத்து தகவலறிந்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.