முகப்பு
நாமக்கல்

சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

ஓமலூா் - சங்ககிரி - திருச்செங்கோடு - பரமத்தி சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On : 7 நவம்பர், 2024 at 12:23 AM
பகிர்:
Updated On : 6 நவம்பர், 2024 at 6:51 PM

நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்துக்கு உள்பட்ட திருச்செங்கோடு உள்கோட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின கீழ் நடைபெற்று வரும் ஓமலூா் - சங்ககிரி - திருச்செங்கோடு - பரமத்தி சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை சேலம், நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் கே.கதிரேசன் ஆய்வு மேற்கொண்டு கலவையின் தடிமன் அடா்த்தி, உறுதித்தன்மை, சாலையின் கேம்பா் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 11:54 PM

இந்த ஆய்வின் போது, நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாடு உதவி கோட்டப் பொறியாளா் பி.தமிழரசி. உதவிப் பொறியாளா் காா்த்திகேயன், திருச்செங்கோடு உதவி கோட்டப் பொறியாளா் வெ.நடராஜன், உதவிப் பொறியாளா் க.மோகன்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement