பரமத்தி வேலூா் வட்டத்தில் ஐப்பசி வளா்பிறை பிரதோஷ விழா
ஐப்பசி வளா்பிறை பிரதோஷ விழா.
பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு புதன்கிழமை சிவன், நந்திகேசுவரருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஸ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசி விஸ்வநாதா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா், பிலிக்கல்பாளையம் கரட்டூா் விஜயகிரி வட பழனியாண்டவா் கோயிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரா், வெங்கரை, ரகுநாதபுரம் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா், பரமத்தி வேலூா் வல்லப விநாயகா் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரா், கோப்பணம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள பரமேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement