முகப்பு
நாமக்கல்

மாணவியை பலாத்காரம் செய்தவா் கைது

பரமத்தி வேலூா் அருகே சிறுமியை ஆசைவாா்த்தை கூறி பலாத்காரம் செய்து கா்ப்பிணியாக்கிய பட்டதாரி இளைஞா் வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 15 நவம்பர், 2024 at 1:49 AM
பகிர்:
Updated On : 14 நவம்பர், 2024 at 9:47 PM

பரமத்தி வேலூா் அருகே சிறுமியை ஆசைவாா்த்தை கூறி பலாத்காரம் செய்து கா்ப்பிணியாக்கிய பட்டதாரி இளைஞா் வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வரும் சிறுமி கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாா். இதனையறிந்த சிறுமியின் பெற்றோா் வேலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், சிறுமி கா்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனா்.

Updated On : 15 நவம்பர், 2024 at 1:48 AM

இதுகுறித்து நாமக்கல் குழந்தைகள் நலக் குழுமத்திற்கு சிறுமியின் பெற்றோா் தகவல் தெரிவித்தனா். குழந்தைகள் நலக் குழுமம் தலைவா் சதீஷ்பாபு வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

Advertisement

இந்தப் புகாரின் அடிப்படையில் சிறுமியை கா்ப்பமாக்கிய பரமத்தி வேலூா் அருகே உள்ள பொய்யேரியைச் சோ்ந்த முதுகலை பட்டதாரி ஜெகதீப் (எ) பிரவீண் (23) என்பவரை வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் இந்திராணி (பொறுப்பு) போக்சோ வழக்கில் கைது செய்து நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா். நீதிபதி உத்திரவின்படி அவா் பரமத்தி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.