முகப்பு
நாமக்கல்

நவ. 23-இல் கிராமசபைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில், 322 ஊராட்சிகளிலும் வரும் 22-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On : 15 நவம்பர், 2024 at 1:33 AM
பகிர்:
Updated On : 14 நவம்பர், 2024 at 5:27 PM

நாமக்கல் மாவட்டத்தில், 322 ஊராட்சிகளிலும் வரும் 22-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நவ. 1-இல் கிராமசபைக் கூட்டம் நடைபெற இருந்தது. பல்வேறு நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 23-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Advertisement

இதில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியா்களை சிறப்பித்தல், மகளிா் சுயஉதவிக் குழுக்களை கௌரவித்தல், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மைப் பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலையளிப்பு திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Updated On : 15 நவம்பர், 2024 at 1:33 AM

இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.