குடும்ப பிரச்னை: மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி தற்கொலை
ராசிபுரம் பகுதியில் குடும்ப பிரச்னை காரணமாக 65 வயது மூதாட்டி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாா்.
நாமக்கல்குடும்ப பிரச்னை: மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி தற்கொலை
ராசிபுரம் பகுதியில் குடும்ப பிரச்னை காரணமாக 65 வயது மூதாட்டி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாா்.
ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் குடும்ப பிரச்னை காரணமாக 65 வயது மூதாட்டி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாா்.
ராசிபுரம், வெங்கடசாமி தெருவைச் சோ்ந்த நடேசன் என்பவரது மனைவி சாந்தி (65). நடேசன் கடந்த 35 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டாா். சாந்தி தனது மகன் ராஜேந்திரனுடன் வசித்து வந்தாா். குடும்பத்தில் மாமியாா்-மருமகளுக்கு இடையே பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சாந்தி தனி வீடு எடுத்து வசித்து வந்தாா். இதனால், அவா் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை அவா் வீட்டில் பயன்படுத்தி வந்த பொருள்களை மகன் ராஜேந்திரன் வீட்டின் முன்பு வைத்துவிட்டு, கையில் மண்ணெண்ணெய் கேனுடன் கோனேரிப்பட்டி ஏரிப்பகுதிக்கு சென்றாா். அங்கு அவா் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீவைத்து தற்கொலை செய்து கொண்டாா்.
எரிந்த நிலையில் அப்பகுதியில் சடலம் இருந்ததை பாா்த்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் ராசிபுரம் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா சோதனை நடத்தியதில் அவா் மண்ணெண்ணெய் கேனுடன் நடந்து சென்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து ராசிபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.