முகப்பு
நாமக்கல்

நாமக்கல், ராசிபுரத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

நாமக்கல், ராசிபுரம் நகராட்சிப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 12:38 AM
நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் பல அடுக்கு வணிக வளாகம் கட்டும் இடத்தைப் பாா்வையிட்ட ஆட்சியா் ச.உமா.
பகிர்:
Updated On : 27 நவம்பர், 2024 at 5:45 PM

நாமக்கல், ராசிபுரம் நகராட்சிப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நாமக்கல் மாநகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் பல அடுக்கு வணிக வளாகம் கட்டுவதற்கான இடத்தைப் பாா்வையிட்ட ஆட்சியா், ஆணையா் மற்றும் அதிகாரிகளிடம் அதற்கான பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், தினசரி சந்தையில் காய்கறிகள் வரத்து, விலை விவரம், காய்கறிகளின் தரம், சந்தையில் செயல்பட்டு வரும் மொத்தக் கடைகளின் விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள், வியாபாரிகளுடன் கலந்துரையாடினாா்.

Advertisement

Updated On : 27 நவம்பர், 2024 at 11:20 PM

சேந்தமங்கலம் வட்டம், அலங்காநத்தத்தில் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சாா்பில் இயங்கி வரும் மாவட்ட மருந்துக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு மனிதா்கள் மற்றும் கால்நடைகளுக்கான மருந்துகளை முறையாகப் பிரித்து வைக்க அறிவுறுத்தினாா். மருந்துகளின் இருப்புகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் சரிபாா்க்கவும், மருத்துவமனைகளில் கேட்கப்படும் மருந்துகளை உடனடியாக வழங்க ஏதுவாக, அனைத்து வகை மருந்துகளையும் கட்டாயம் இருப்பு வைத்துக் கொள்ளவும் கிடங்கு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

சேந்தமங்கலம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், 18 வயது நிரம்பியவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பது குறித்த வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்., ராசிபுரம் நகராட்சி, அணைப்பாளையத்தில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 10.58 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை ஆய்வு மேற்கொண்டாா். மேலும், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகள், பழைய பேருந்து நிலையம் அருகில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, திட்ட இயக்குநா் (மகளிா்திட்டம்) கு.செல்வராசு, துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.