முகப்பு
நாமக்கல்

தேய்பிறை காா்த்திகை மாத பிரதோஷ விழா

பிரதோஷ விழா...

Updated On : 29 நவம்பர், 2024 at 1:54 AM
தேய்பிறை பிரதோஷ அலங்காரத்தில் கோப்பணம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள பரமேஸ்வரா்.
பகிர்:
Updated On : 28 நவம்பர், 2024 at 8:47 PM

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் காா்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவன், நந்திகேஸ்வரருக்கு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன.

Updated On : 29 நவம்பர், 2024 at 1:54 AM

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஸ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசி விஸ்வநாதா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா், பிலிக்கல்பாளையம் கரட்டூா் விஜயகிரி வட பழனியாண்டவா் கோயிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரா், வெங்கரை, ரகுநாதபுரம் காவிரி கரையில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரா், பரமத்தி வேலூா் வல்லப விநாயகா் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்க விஸ்வேஸ்வரா், கோப்பணம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள பரமேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் காா்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. விழாவில், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.