முகப்பு
நாமக்கல்

நாமக்கல் புதிய பேருந்து நிலைய கடைகள் நாளை பொது ஏலம்

நாமக்கல் புதிய பேருந்து நிலைய வியாபார கடைகள் வெள்ளிக்கிழமை (அக்.4) பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

Updated On : 3 அக்டோபர், 2024 at 6:34 AM
பகிர்:
Updated On : 2 அக்டோபர், 2024 at 9:52 PM

நாமக்கல் புதிய பேருந்து நிலைய வியாபார கடைகள் வெள்ளிக்கிழமை (அக்.4) பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

நாமக்கல், முதலைப்பட்டிபுதூரில் ரூ. 20 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாா் நிலையில் உள்ளது. முதல்வா் நாமக்கல் வருகையின்போது பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படலாம் என தெரிகிறது. இந்த பேருந்து நிலையத்தில், 57 கடைகள், 2 உணவகங்கள், இரு சக்கர வாகன நிறுத்தம், நான்கு சக்கர வாகன நிறுத்தம், 3 கட்டண கழிவறைகள் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தப்புள்ளி நேரடியாகவும், இணைய வாயிலாகவும் பெறப்பட்டு வருகிறது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 6:34 AM

பொது ஏலம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. அன்று காலை 11.30 மணி வரையில் ஒப்பந்தப்புள்ளி கோரலாம். இந்த ஏலமானது, நாமக்கல் மாநகராட்சி அலுவலக மாமன்றக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கடைகள், இதர இனங்களை ஏலம் எடுக்க விண்ணப்பித்துள்ளோா் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ஆா்.மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

Advertisement