சிலம்பம் போட்டி: 3,000 மாணவா்கள் பங்கேற்பு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கலில் சிலம்பம் சுழற்றும் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில், 3,000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கலில் சிலம்பம் சுழற்றும் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில், 3,000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.
மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கு உள்பட்ட நேரு யுவகேந்திரா நாமக்கல் மாவட்ட கிளை, மாவட்ட சிலம்ப ஆசான்கள், பயிற்சியாளா்கள் நலச் சங்கம் சாா்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 3,000 மாணவ மாணவிகள் பங்கேற்ற சிலம்பம் சுழற்றும் போட்டி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை காலை 8 மணி அளவில் நடைபெற்றது.
சேலம், நாமக்கல் மாவட்ட முன்னாள் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தாா். நேரு யுவகேந்திரா ஆலோசனைக் குழு உறுப்பினா் பசுமை மா.தில்லை சிவகுமாா், சிலம்ப ஆசான்கள் சங்கத் தலைவா் பி.ராஜேந்திர குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தப் போட்டியானது காலை 8 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடைபெற்றது.
Advertisement
விளையாட்டுத் துறையில் சிலம்பத்திற்கு உள் இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும், உடல் வலிமை, மனவலிமையை பாதுகாக்கும் நோக்கிலும் நடைபெற்ற இந்த சிலம்பப் போட்டியில் பங்கேற்க 4,300 போ் பதிவு செய்தனா். இதில், 3,000 போ் கலந்து கொண்டனா். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட சிலம்ப பயிற்சியாளா்கள் நலச் சங்கத்தைச் சோ்ந்த காா்த்திக், கீா்த்தனா, சுரேந்தா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.