முகப்பு
நாமக்கல்

காா் மோதியதில் முதியவா் பலி

திருச்செங்கோடு- நாமக்கல் சாலையில் மாணிக்கம்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 5:20 AM
பகிர்:
Updated On : 3 அக்டோபர், 2024 at 9:07 PM

திருச்செங்கோடு- நாமக்கல் சாலையில் மாணிக்கம்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

வேலகவுண்டம்பட்டியை அடுத்த கூத்தம்பூண்டியைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளா் முருகேசன் (75) புதன்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் நாமக்கல் செல்வதற்காக திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் மாணிக்கம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தாா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 5:20 AM

அப்போது திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற காா் மோதியதில் காயமடைந்த முருகேசனை அக்கம் பக்கத்தினா் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

Advertisement

இந்த விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.