முகப்பு
நாமக்கல்

குமாரபாளையம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் பலி

குமாரபாளையமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். அதில் பயணம் செய்த 30 பயணிகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 5:29 AM
கவிழ்ந்த பேருந்து
பகிர்:
Updated On : 3 அக்டோபர், 2024 at 10:30 PM

குமாரபாளையமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். அதில் பயணம் செய்த 30 பயணிகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து 30 பயணிகளுடன் வியாழக்கிழமை கோவைக்கு சென்ற ஆம்னி பேருந்து சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் குமாரபாளையத்தை அடுத்த தட்டாங்குட்டை பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது (படம்).

Updated On : 4 அக்டோபர், 2024 at 5:29 AM

இந்த விபத்தில் பழனியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநரான வீரபிரதீப் (27) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். குமாரபாளையம் தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். குமாரபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement