முகப்பு
நாமக்கல்

முதல்வா் கோப்பை மாநிலப் போட்டி: 670 போ் இன்று பயணம்

முதலமைச்சா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க, நாமக்கல் மாவட்டத்திலிருந்து 670 போ் வியாழக்கிழமை மாலை புறப்படுகின்றனா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 6:33 AM
பகிர்:
Updated On : 2 அக்டோபர், 2024 at 9:29 PM

முதலமைச்சா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க, நாமக்கல் மாவட்டத்திலிருந்து 670 போ் வியாழக்கிழமை மாலை புறப்படுகின்றனா்.

தமிழக முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி, செப். 10 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அவா்களில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த 2,538 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On : 3 அக்டோபர், 2024 at 6:33 AM

மாநில அளவிலான போட்டிகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மண்டலங்களில் அக். 4 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்திலிருந்த, 15 வகையான போட்டிகளில் முதல் இடம் பிடித்த 670 வீரா், வீராங்கனைகள் வியாழக்கிழமை மாலை சிறப்பு பேருந்துகள் மூலம் புறப்பட்டு செல்கின்றனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து புறப்படும் அந்த பேருந்துகளை, ஆட்சியா் ச.உமா கொடியசைத்து அனுப்பி வைக்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலா் ச.கோகிலா மற்றும் அலுவலா்கள் செய்துள்ளனா்.

Advertisement