ஊதியம் வழங்காததால் சிஇஓ அலுவலகம் முற்றுகை
ஊதியம் வழங்காததை கண்டித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை வியாழக்கிழமை ஆசிரியா் பயிற்றுநா்கள் முற்றுகையிட்டனா். அதன்பிறகு அனைத்து வகையான பட்டதாரி ஆசிரியா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அச் சங்கத்தினா் கூறியதாவது:
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் செயல்படும், அனைவருக்கும் கல்வித் திட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில், ஆசிரியா் பயிற்றுநா்கள், இயன்முறை மருத்துவா்கள், கணக்காளா்கள் பணியாற்றி வருகின்றனா். செப்டம்பா் மாத ஊதியம் வழக்கமான தினத்தில் வழங்கப்படவில்லை. மேலும்,
Advertisement
அக். 3 தேதியாகியும் நிலையில் ஊதியம் குறித்த தகவல் இல்லாததால் கவலையடைந்துள்ளோம். உடனடியாக ஊதியம் வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக கோரிக்கை மனுவையும் வழங்கி உள்ளோம் என்றனா்.