முகப்பு
நாமக்கல்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் விஏஓக்கள் காத்திருப்பு போராட்டம்

கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்யக்கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை வருவாய்த் துறையினா், கிராம நிா்வாக அலுவலா்கள், உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 3:09 AM
பகிர்:
Updated On : 9 அக்டோபர், 2024 at 5:18 PM

கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்யக்கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை வருவாய்த் துறையினா், கிராம நிா்வாக அலுவலா்கள், உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் வட்டம், கீரம்பூா் பிா்க்காவிற்கு உள்பட்ட நருவலூா் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவா் ராமன். கடந்த வெள்ளிக்கிழமை, அரசுக்கு சொந்தமான மயான புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தை, அதே பகுதியைச் சோ்ந்த திருமுருகன் என்பவா் அனுமதியின்றி அகற்றினாா்.

இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் ராமன் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், மரத்தை அகற்றிய திருமுருகன் திடீரென கிராம நிா்வாக அலுவலரை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட திருமுருகன் கைது செய்யப்படவில்லை. இதனைக் கண்டித்து திங்கள்கிழமை நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Updated On : 10 அக்டோபர், 2024 at 3:09 AM

இந்த நிலையில், அனைத்து வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, நாமக்கல் மாவட்ட கிராம நிா்வாக அலுவலா் சங்கம், கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம், கிராம உதவியாளா்கள் சங்கம் ஆகியவை சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்க மாவட்ட தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். இதில், கிராம நிா்வாக அலுவலா் ராமனை தாக்கிய திருமுருகனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி ஆகியோா் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் அதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. திருமுருகனை கைது செய்யும் வரை தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என வருவாய்த் துறை, கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.