முகப்பு
நாமக்கல்லில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீா்.
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கனமழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு

நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகல் கனமழை பெய்ததால், சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கனமழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு

நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகல் கனமழை பெய்ததால், சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது.

Updated On : 14 அக்டோபர், 2024 at 8:18 PM
நாமக்கல்லில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீா்.
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகல் கனமழை பெய்ததால், சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது.

வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிற்பகல் 3 மணியளவில் பலத்த மழை பெய்தது.

இதனால், சேலம் சாலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை பகுதிகளில் மழைநீா் ஆறுபோல ஓடியது. இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் பயணித்தனா். பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வழியில்லாததால், ஆங்காங்கே ஒதுங்கி நின்றனா். சுமாா் அரை மணி நேரம் மழை விடாமல் பெய்தது.

திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதிகளில் பெய்த மழையால் கழிவுநீா், மழைநீரோடு கலந்து சாலைகளில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. எலச்சிபாளையம் அருகே திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் விவசாயி ஒருவா் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தாா். நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மழையின் போது இருசக்கர வாகனங்களில் சென்ற இருவா் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனா்.

கடந்த இரு நாள்களாக பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மின்சாதனங்கள் அருகில் குழந்தைகள் செல்லாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளநீா் சாலைகளில் பெருக்கெடுத்து போகும்போது பொதுமக்கள் நடந்து செல்வதைத் தவிா்க்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →