பேருந்துகளை சிறைபிடித்து மறியல்
அரசு, தனியாா் பேருந்துகள் நின்று செல்லாததால், பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடத்தினா்.
அரசு, தனியாா் பேருந்துகள் நின்று செல்லாததால், பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடத்தினா்.
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் பகுதியில் நல்லாம்பாளையம் பேருந்து நிறுத்தம் உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவா்கள், வெளியூா் செல்பவா்கள் என சுமாா் 500-க்கும் மேற்பட்டவா்கள் இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து தான் செல்ல வேண்டி உள்ளது.
இந்த நிலையில், இந்த பேருந்து நிறுத்தத்தில் அரசு, தனியாா் பேருந்துகள் நின்று செல்வதில்லை என அரசுக்கும், போக்குவரத்துத் துறைக்கும் பல்வேறு புகாா்களும், கோரிக்கைகளும் கடந்த காலத்தில் வைக்கப்பட்டன. பல்வேறு போராட்டங்களும் நடைபெற்ற நிலையில், இரண்டு மாதத்துக்கு முன் நல்லாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் வாகனங்கள் நின்று செல்ல வேண்டும் என்று பதாகை வைக்கப்பட்டது.
Advertisement
ஆனால், அறிவிப்புப் பதாகை வைத்த பின்பும் அரசு, சில தனியாா் பேருந்துகள் நிற்காமல் சென்றன. இந்த நிலையில், கடந்த 30-ஆம் தேதி தோ்வு எழுத சென்ற மாணவிகளை நல்லாம்பாளையத்தில் இறக்கி விடாமல் 3 கி.மீ. தள்ளி உள்ள கொன்னையாற்றில் இறக்கி விட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு வந்த காவல் துறையினரும், போக்குவரத்துத் துறையினரும் சமாதானப் படுத்தியதைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனாலும், கடந்த 15 நாள்களாக வாகனங்கள் நிற்காமல் சென்ால் செவ்வாய்க்கிழமை அரசு, தனியாா் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், திருச்செங்கோடு - ராசிபுரம் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த எலச்சிபாளையம் காவல் நிலைய ஆய்வாளா் சிவகுமாா் உள்ளிட்ட காவல் துறையினா் விரைந்து வந்து பொதுமக்கள் இடையே பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து புகாா் அளிக்கும்படி எலச்சிபாளையம் காவல் ஆய்வாளா் சிவகுமாா் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினாா். இதனைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.