போதைப் பொருள்களை பதுக்கிய சகோதரா்கள் கைது
பள்ளிபாளையம் அருகே தனியாக வீடு எடுத்து தங்கி கஞ்சா பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட சகோதரா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.
பள்ளிபாளையம் அருகே தனியாக வீடு எடுத்து தங்கி கஞ்சா பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட சகோதரா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவேரி ரயில் நிலையம் பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (26). இவரது தம்பி விஜய்சேகா் (20). இருவரும் வெப்படை அருகே உள்ள சின்னாரபாளையம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனா். அவா்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், வெப்படை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், ஆய்வாளா் ரங்கசாமி, உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் ரகசியமாக கண்காணித்து அவா்கள் தங்கியிருந்த வீட்டை அதிரடியாக சோதனையிட்டனா். அதில், ஒரு துணிப்பையில் 2.50 கிலோ போதைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் சோய்து, இவருரையும் கைது செய்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.
Advertisement