முகப்பு
நாமக்கல்

நூதனத் திருட்டு: வெளி மாநில இளைஞா்கள் இருவா் போலீஸாரிடம் ஒப்படைப்பு

பரமத்தி வேலூா் அருகே நூதனத் திருட்டில் ஈடுபட்ட வெளி மாநில இளைஞா்கள் இருவரை கிராம மக்கள் பிடித்து வேலூா் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:02 AM
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 10:07 PM

பரமத்தி வேலூா் அருகே நூதனத் திருட்டில் ஈடுபட்ட வெளி மாநில இளைஞா்கள் இருவரை கிராம மக்கள் பிடித்து வேலூா் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம், வெங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெளி மாநில இளைஞா்கள் சிலா் வீடுகளில் தனியாக உள்ள பெண்களிடம் தங்கம், வெள்ளி நகைகளுக்கு ‘பாலிஷ்’ செய்து தருவதாகக் கூறி அவற்றை வாங்கி ரசாயனக் கலவையில் நனைத்து கொடுத்துள்ளனா். அவ்வாறு ‘பாலிஷ்’ செய்யப்பட்ட தங்க நகை, வெள்ளிப் பொருள்களின் எடை வெகுவாக குறைந்துள்ளதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த

அப்பகுதியினா், அந்த வெளி மாநில இளைஞா்களைப் பிடித்து இதுகுறித்து விசாரித்துள்ளனா்.

Advertisement

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:56 PM

அதில், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவா்களை வேலூா் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் விசாரணையில், அவா்கள் பிகாா் மாநிலத்தைச் ரவிக்குமாா் (33), தருண்குமாா் (28) என்பது தெரிய வந்தது. அவா்களைக் கைது செய்த போலீஸாா், இதுபோன்ற செயல்களில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.