சாய ஆலைத் தொழிலாளா்கள் கோட்டாட்சியரிடம் மனு அளிப்பு
சாய ஆலைத் தொழிலாளா்கள் கோட்டாட்சியரிடம் மனு அளிப்பு
மூடப்படும் சாய ஆலைகளால் தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாலும், தீபாவளி நெருங்கும் சமயத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டால் தீபாவளி ஊக்கத்தொகை பறிபோகும் நிலை இருப்பதாகவும் தெரிவித்து திருச்செங்கோடு சாய ஆலைத் தொழிலாளா்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட சாயப் பட்டறைகள் இயங்கி வருகின்றன. விதிமுறைகளை மீறி இயங்கி வரும் சாயப் பட்டறைகளை அவ்வப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ‘சீல்’ வைத்து வருகின்றனா். இதனால் அந்த சாயப்பட்டறைகளில் பணிபுரிந்த தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வந்த ராஜரத்னா டையிங் பேக்டரி மில்ஸ் சாயப்பட்டறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்தப் பட்டறையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வந்த நிலையில், தீபாவளிக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் சாயப்பட்டறை மூடியது தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயலாக உள்ளது. தற்போது தீபாவளி நெருங்கி வருவதால் தங்களது மாத வருமானமும், தீபாவளி ஊக்கத்தொகையும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Advertisement
இதனைக் கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்து தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என திருச்செங்கோடு கோட்டாட்சியா் சுகந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.